குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள இனிய இயற்கை எழில் கொஞ்சும் ஆளூர் கிராமம், நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் 8 .கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆளூரின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 % இஸ்லாமிய பெருமக்களைக் கொண்டது. நேர்த்தியாக அமைந்துள்ள ஐந்து தெருக்களிலும் முஸ்லிம்களின் வீடுகள் அமைந்துள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 'அஞ்சுவண்ணம்' எனும் மொழிப்பட்டம் கொண்டு அழைக்கப்படும் ஐந்து ஊர்களில் ஒரு ஊர் ஆளூர் ஆகும்.
முன்னாளில் மக்கள் நெசவுத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்த போதிலும், இப்போது பெரும்பாலானவர்கள் சென்னையில் தொழில் துறையில் ஈடுபட்டு அங்கேயே வாழ்வை அமைத்துக் கொண்டனர். தற்போது ஆளூரில் விவசாயம் மற்றும் பல்வேறு சிறு தொழில்கள் செய்து மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். இருப்பினும் ஊதுபத்தி உற்பத்தி விற்பனையும் பெருமளவில் இங்கு நடக்கிறது. வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்களும் அதிகம் உண்டு.
சுமார் 3500 முஸ்லிம்களைக் கொண்ட ஆளூர் ஜமாத்தில் இரண்டு ஜூம்மா பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பள்ளியில் ஜூம்மா நடைபெறும். பதுரு சகாபாக்களின் நினைவாக ஒரு பள்ளி உள்ளது. அங்கு பெண்களுக்கான தொழுகைகள் நடைபெறுகின்றன.
[கோட்டாறு ரஹ்மானிய்யாச் சங்கத்தால் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, குமரிமாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பொக்கிஷமான 'பெட்டகம்' நூலில் இடம்பெற்ற கட்டுரை]
No comments:
Post a Comment